

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் “சம்வேதனா” – இனி தமிழ் மொழியிலும்
கொரோனா நோய் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் கடந்த மாதம் #சம்வேதனா என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் துவங்கப்பட்ட இச்சேவை முன்பே அறிவித்தது போல் தற்போது பிராந்திய மொழிகளையும் இணைத்து வருகிறது அதில் முதலில் தமிழை இணைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இன்று உலக பெண் குழந்தைகள் தினத்தில் ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினரும் இத்திட்டத்தை கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றிய Dr.R.G.ஆனந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்..
——————————————————