சென்னை: இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட உள்ளது. இதேபோல் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும், போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலை கிராமங்கள் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் சொட்டு மருந்து குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களுக்கும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 6 ஆயிரத்து 700 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
- Advertisement -
Latest article
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரிடம், ஒழுங்கினமாக நடந்து கொண்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏவை கைது செய்ய வேண்டும். அரசின் கவனத்திற்கு வந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்திற்கு பொய் சொல்கிறார்கள். ஆட்சியருக்கே இந்த...
அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியதாக அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு ரத்து! சென்னை...
புதுக்கோட்டையில் அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணி நடத்தியதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவ.1-ம் தேதி,...
“திமுகவில் மெகா அதிரடி! 110 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை? அறிவாலயத்தில் பரபர ஆலோசனை – ஸ்டாலின் போடும்...
"திமுகவில் மெகா அதிரடி! 110 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை? அறிவாலயத்தில் பரபர ஆலோசனை - ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்!"
உள்ளே என்ன நடக்குது?
திமுகவில் 77 மாவட்டங்களாக இருந்ததை *110 மாவட்டங்களாக உயர்த்தி...













