புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளராக இருப்பவர் மருத்துவர் வை.முத்துராஜா இவர் தன்னுடைய மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் கணவர் திருமணமாகி சில நாட்களிலேயே மரணமடைந்தார் சொல்லலா துயரத்தில் இருந்த அந்த ஏழைப் பெண்ணுக்கு மருத்துவர் முத்துராஜா மறுமணம் செய்து கொள்ள ஆலோசனை வழங்கினார் சிறு வயதில் கணவனை இழந்தாலும் வாழ்க்கையை தொலைக்க கூடாது என்பதற்காக மறுமணம் செய்ய வேண்டும் என அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார் இதையடுத்து அந்த பெண்ணுக்கு மணமகன் பார்க்கும் படலம் நடைபெற்றது திருமண தேதியும் குறிக்கப்பட்ட நிலையில் தன்னிடம் பணியாற்றிய ஏழை பெண்ணுக்கு ரூபாய் 50,000 திருமண உதவியாக வழங்கினார் இந்த உதவியை பெற்றுக் கொண்ட அந்தப் பெண் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் வருவது உண்டு என்றும் எதிர்பாராத விதமாக தன்னுடைய கணவர் இருந்தாலும் வாழ்க்கையை தொலைக்க கூடாது வாழ்க்கை என்பது வாழ்வதற்கு என்று ஆலோசனை வழங்கியும் என்னுடைய திருமணத்திற்கு ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கிய மருத்துவர் முத்துராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பிலுள்ள மதிப்பிற்குரிய மருத்துவரானவை.முத்துராஜா அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக தெரிவித்தார்
திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவரணி பொறுப்பாளராக இருக்கும் முத்துராஜா கஜாபுயல் புதுக்கோட்டையை தாக்கிய நேரத்தில் இருந்து மக்களுக்காக சேவை செய்வதும் அகால மரணமடைந்த குடும்ப தலைவருக்கு நிதியுதவி வழங்கி அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையை வாங்கித் தருவதிலும் மற்ற அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார் என்பது அனைவரும் பாராட்டும் விஷயமாக உள்ளது
இது பற்றி மருத்துவர் முத்துராஜா கூறும்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் கொள்கைக்கு ஏற்ப அவர்களுடைய வழிகாட்டுதலின் படியும் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக கணவனை இழந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என தங்களுக்கு இட்ட உத்தரவு இன்று வரை தன் மனதில் பதிந்து இருப்பதாகவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வும் இதுபோன்ற உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார் நல்ல எண்ணம் இருந்தால் அனைவரும் நலமோடு இருக்கலாம் ஆனால் நல்ல எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு சிலரால் மட்டுமே இன்றுவரை மனிதநேயம் இருக்கிறது என்பதற்கு மருத்துவர் முத்துராஜா உதாரணமாக திகழ்கிறார்.