தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
வேலூர் அருகே 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம் விவகாரத்தில் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தேசிய குழந்தைகள் உரிமை...
கடந்த 27ஆம் தேதி அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து ஆறு சிறார்கள் தப்பி ஓடிய விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ் அவர்களுக்கு தேசிய குழந்தைகள்...
தனியார் பள்ளி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வருகிறது – தனியார்...
புதுக்கோட்டை தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் தனியார் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களுக்குள் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு கட்டுரை வெளியிட்டு விழா, இதில் 43...
பொறுப்பேற்ற நாளில் அதே உத்வேகத்துடன் மீண்டும் களத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்....
“விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம சிறுமி மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தானாக முன்வந்து வழக்கு விசாரணை” (SUO MOTO)
தேசிய குழந்தைகள் உரிமை...