டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு

1014

உலகில் வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்கம் மக்களைச் சென்றுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் தகவல்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கும் ஏற்ப அவை பயன்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் ஊடங்களுக்கு அச்சு, மற்றும் இதர தொலைக்காட்சி
ஊடகங்களைப் போலவே அங்கீகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கூறியுள்ள்தாவது:

*டிஜிட்டர்
ஊடக செய்தியாளர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு இனிமேல் பத்திரிக்கையாளர் கூட்டங்களில் அனுமதி வழங்கப்படும் , 

* உரையாடல்களில் பங்கேற்கவும் பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும் எனவும், 

* பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீராம் பெற்றுள்ள நபர்களுக்கு அனைத்துப் பலனகள் மற்றும் ரயில் பயண சலுகைகள் 
வழங்கப்படும் எனவும், 

*டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறவும், தகுதி ஏற்படுத்தப்படும் எனவும், 

* அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் உள்ள அமைப்புகளைப் போல டிஜிட்டல் ஊடகத்திற்உ சுய கட்டுப்பாடு அமைப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here