
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சூடு பிடித்துள்ளது.
தற்போது புதுக்கோட்டையில் மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை. முத்துராஜாவை திமுக தலைவர் தலைவர் மு. க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டையில் திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் டாக்டர் முத்துராஜா வுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
மருத்துவர் டாக்டர் முத்துராஜாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளாக திமுக சார்பில் பல்வேறு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை திறம்பட ஆற்றி செயல்பட்டு வருகிறார்..
இதனால் புதுக்கோட்டை நகர் பகுதியில் டாக்டர் முத்துராஜா அனைவரும் அறிந்ததே..
அதுபோல் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை தொகுதி உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது இளைஞர்கள், தாய்மார்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பட்ட அவர்களும் டாக்டர் முத்துராஜா அவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்…
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் முத்து ராஜா புதுக்கோட்டை நகரில் இருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளும் திமுக ஆட்சியில் வந்தவுடன் உடனடியாக சரி செய்யப்படும் எனவும் முக்கியமாக புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து நாட்களிலும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று புதிய உத்வேகத்துடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..