சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

498

கேள்வி-…….
கல்வெட்டில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளாரே…

பதில்…..
நீதிமன்றத்தின் கண்டத்திற்கு உரிய செயல். ஏன் என்றால் நீதிமன்றம் தெளிவாக
தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் வரை சென்று நாங்கள்தான் கழகம் என்றும்
அதுபோல இரட்டை இலை, எங்களுக்கு, நாங்கள்தான் கட்சி என்று எல்லோரும் ஒற்றுமையாக
இருக்கும் நிலையிலே  ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆக
முடியுமா?.செஞ்சி கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜதேசிங்கு ஆக
முடியுமா?.மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டப்பொம்மன் ஆக முடியுமா?. கட்சியைப்
பொறுத்தவரையில் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்குமோ,அதனை எடுக்கும்.அதே
நேரத்தில் அவர் என்ன தியாகம் செய்தார்.இன்றைக்குபெயரை
மாற்றிவிட்டார்கள். தியாக தலைவி என்பதுபோய் இன்றைக்கு
புரட்சித்தாயாம்… பெங்களூர் சிறையிலிருந்து வந்து 8 மாதம் ஆகிறது. இந்த
8 மாதத்தில் ஏதாவது ஒருநாள் தலைவரின் நினைவிடத்திற்கோ,அம்மா
நினைவிடத்திற்கோ,அண்ணாவின் நினைவிடத்திற்கோவந்து மரியாதை
செலுத்தியிருப்பார்களா…இதே பொன்விழா அடுத்த வருடம் வந்தால் அடுத்த
ஆண்டுதான் வருவார்.இப்போது வந்திருக்க மாட்டார். இப்படி 8 மாதம்
எதுவும் இங்கு எட்டிப் பார்க்காமல் பொன்விழா எழுச்சியோடு,ஒற்றுமையோடு
கொண்டாடுவது அவர்களுக்குப் பொறுக்கவில்லை. அவரால்தான் 96 ல் இயக்கம்
தோல்வியுற்றது.96 ம் ஆண்டு சசிகலா சார்ந்தவர்களால் தான் கழகம் எனும்
மாபெரும் இயக்கம் தோல்வி அடைந்தது.சசிகலா குடும்பம் மட்டுமே
பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயரவேண்டும்
என்பதற்காகப் பாடுபட்டார்கள்.கட்சிக்காரர்களைச் சுரண்டி,சித்ரவதை செய்து
கொடுமைகளைச் செய்த செயலை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அப்படி எல்லாம்
இருந்து இன்றைக்கு வானத்திலிருந்து அவதாரம் எடுத்ததுபோல புரட்சித்தாய்
என்று சொன்னால், தமிழ்நாட்டிலே  எம்ஜிஆர்தான் புரட்சித்தலைவர், இதயதெய்வம்
அம்மாதான் புரட்சித்தலைவி. வேறு யாரும் தாய் கிடையாது.இவர் என்ன புரட்சி
செய்தார்.அவர்கள் குடும்பத்தை வாழவைக்கும் ஒரே புரட்சியைத்தான்
செய்தார்.இன்றைக்கு புரட்சித்தாய் என்று புது பட்டம். தியாகத்தலைவியை
விட்டுவிட்டார்கள். அவர் கட்சிக்கு எந்த தியாகத்தையும் செய்யவில்லை
என்று தெரிகிறது.எனவே பெயரை மாற்றி எத்தகைய வடிவில் வந்தாலும்
சரி,தமிழ்நாட்டு மக்களும் சரி,கழக தொண்டனும் சரி,ஒருக்காலும் இந்த கொள்ளை
குடும்பத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி……

இப்படி நீங்கள் அவரை நேரடியாகத் தாக்கி பேசுகிறீர்கள். அன்றைக்கு நீங்களும்
சேர்ந்துதானே அவரை பொதுச்செயலாளராக முன்மொழிந்தீர்கள்.

பதில்…
அது ஒரு தற்காலிக ஏற்பாடு.இப்போது என்ன பிரச்சினை என்று
பாருங்கள்.அதற்குப் பிறகு பிரச்சினை ஏற்பட்டு,அனைவரும்
ஒருங்கிணைந்துவிட்டோம்.பொதுக்குழுவில் முடிவு செய்தோம்.பொதுக்குழுதானே
இறுதி.பொதுக்குழு என்ன முடிவு செய்தது.அவர் தேவையில்லை என்று. எனவே அவரை கட்சியில் இருந்து
நீக்கிவிட்டோம். அதனை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம்
நாங்கள் செய்ததுதான் சரி என்று தெரிவித்தது.அவர்களுக்கு எந்தவிதத்திலும்
சம்பந்தம் கிடையாது என்றும் தெரிவித்துவிட்டது.தேர்தல் ஆணையமும்
அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று
சொல்லிவிட்டது. இதற்குமேல் என்ன வேண்டும்.

கேள்வி….ஏன் பொதுக்குழுவில் பொதுச்செயலாரை தேர்வு செய்யவில்லை?

பதில்….

பொதுக்குழு இறுதி அதிகாரம் படைத்தது. பொதுக்குழுவில் அனைவரும் ஒன்றுபட்டு
இப்படித்தான் கட்சியை நடத்தவேண்டும்  என்று முடிவு எடுத்தோம்.அதுதான்
ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்.அதுபோல
புரட்சித்தலைவி அம்மாவைப் பொறுத்தவரையில் அவர்கள்தான் நிரந்தர
பொதுச்செயலாளர்.வேறு யாரும் கட்சியில் கிடையாது.அதனால்தான் அவர்கள் இல்லை
என்றாலும்கூட இன்றைக்கு எங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.எங்களை
வழிநடத்திக்கொண்டிருக்கிறார். புரட்சித்தலைவி, புரட்சித்தலைவர்
நல்லாசியோடுதான்  இன்றைக்கு நாங்கள் கட்சியை நடத்திவருகிறோம்.

கேள்வி….

இரட்டை தலைமை இருந்ததால் தான் இந்த தேர்தலில் கட்சி பின்னடைவைச்
சந்தித்துள்ளது.அதிமுக செய்யவேண்டிய அனைத்து செயல்களையும்  பாஜக
முன்னின்று போராட்டம் நடத்துகிறது என்று  கருத்து குறித்து …….

பதில்….இரண்டு விஷயம்…திமுகவிற்கும்,கழகத்திற்கும் சட்டமன்றத்தில்
என்ன வித்தியாசம். சட்டமன்ற தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம்
நடத்துகிறது.தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலில் ஒரு சதவீதம்தான் வாக்கு
வித்தியாசம்.அப்படி என்ன திமுக மகத்தான வெற்றி பெற்றது. ஜஸ்ட் மிஸ்.தலை
தம்பியது தம்பிரான் புண்ணியம் என்பதுபோல  ஒரு சதவீதம் ஒட்டு கூடுதலாகப்
பெற்று ஆட்சி அமைத்துவிட்டார்கள்.சட்டமன்றத்தில் ஒருகோடியே நாற்பது
லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். தொண்டர் பலம்,மக்கள் பலம் உள்ள இயக்கம்
கழகம்தான் என்பது இதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுவிட்டது.உள்ளாட்சித்
தேர்தலைப் பொறுத்தவரையில் மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.மாநில
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக்கொண்டு அவர்கள்
செயல்பட்டார்கள். கிட்டத்தட்ட 17 க்கும் மேற்பட்ட புகார்களை அளித்தோம்.அதனை
எல்லாம் குப்பைத் தொட்டியிலே போட்டுவிட்டார்கள்.வேங்கிகாலில் 12 ஆயிரம்
வாக்குகள் பதிவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்கு
எண்ணிக்கையின்போது 16 ஆயிரம் வாக்குகள் உள்ளது.எப்படி வந்தது? பல இடங்களில் மின்வெட்டு.டார்ச் லைட் வைத்து வாக்கு
எண்ணிக்கை நடைபெற்றது.பல இடங்களில் வாக்குச் சாவடியை மூடிவிட்டு
ஓட்டுபோட்டுக்கொண்டார்கள்.ஜனநாயக விரோத செயல் அத்தனையும்
அரங்கேற்றித் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத
செயலை அரங்கேற்றி ஒரு போலியான, அதர்மமான வெற்றியை திமுக பெற்றுள்ளது.இது
மக்கள் செல்வாக்குடன் பெற்ற வெற்றியா? கூடவே சர்வ சாதாரணமாகப்
பணத்தை அள்ளி வீசினார்கள்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை
அள்ளிவீசினார்கள்.செயற்கையான வெற்றியைப் பெற்றுள்ளார்களே தவிர உண்மையான
வெற்றி இல்லை.திமுக பெற்றது வெற்றியே கிடையாது. அதைப்பற்றி நாங்கள்
கவலைப்படவில்லை.எங்களைப் பொருத்தவரையில் பிரதான தேர்தல் வரும்போது கழகம்
மாபெறரும் வெற்றியை ஈட்டும்.இனி வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் மகத்தான
வெற்றியைக் கழகம் பெறும்.

கேள்வி…..அதிமுகவை பாஜக கைப்பற்றிவிட்டது என்று சொல்லப்படுகிறதே…

பதில்….நாங்கள் என்ன கைக்குழந்தையா.. எங்களைத் தூக்கி மடியில்
வைத்துக் கொள்வதற்கு.மிகப்பெரிய வரலாறு கழகத்திற்கு உண்டு.எங்களைப்
பொறுத்தவரையில் தனித்தன்மை உண்டு.அந்த தனித் தன்மையில் யாரும் குறுக்கிட
முடியாது.எங்களைப் பொறுத்தவரையில் ஒரு அடையாளம் உள்ளது. தமிழகத்தைப்
பொறுத்தவரையில் கழகம்தான் ஒரு மாபெரும் சக்தி.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here