வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்..
இந்த நிலையில் பாஜக சேர்ந்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் அவர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்!
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி,
மழை வெள்ளத்தில்
சிக்கித் தவிக்கும்
மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த
ஆர்.ஜி. ஆனந்த் அவர்கள்,
பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சொந்த திட்டமான,
நமோ கேர்-2021 மூலம்,
சென்னை பாரிமுனை
அரியாங்குப்பம் பகுதி மக்களுக்கு
நிவாரண உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர்
மீனவர் குடியிருப்பு
குடும்பங்களுக்கு சென்று பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த்..
எதிர் கட்சி, ஆளும் கட்சிக்கு இணையாக பாஜக சேர்ந்த டாக்டர் ஆர். ஜி. ஆனந்த் நிவாரண உதவிகள் பொது மக்களும் பெரும் உதவியாக இருந்தது என்று நிவாரண உதவிகள் பெற்ற பயனாளிகள் நன்றி தெரிவித்துக் வருகின்றனர்!