திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவர்கள் பள்ளி அறையில் சக மாணவர்களுடன் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை பள்ளியில் தலைமையாசிரியர் காமத் ஏப்ரல் 26 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை 5 மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் நேரில் மாணவர்களிடம் பெற்றோர்கள் முன்னிலையில் விசாரணை செய்தார். இந்த விசாரணையில் வட்டாட்சியர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்த், பள்ளிகள் துணை ஆய்வாளர் முனைவர் குணசேகரன் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் குற்றச்சாற்று.