கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகைப் புரிந்தார். முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பிரிவு சாலையில் 107 வது எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு 70 அடி உயரமுள்ள கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் எதிரே இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இறைவன் சக்தி பெற்று கட்சியை காத்து வருகின்றனர். யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள்தான் கெட்டுப் போவார்கள்.
கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார் என தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டியுள்ளார்.