கூட்டுறவு சங்கங்களில் 3,000 காலி பணியிடங்கள்…விண்ணப்பிக்க தயாரா?

385

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 3000 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பம் வரும் 1-ந் தேதியுடன் முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும்,
42 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.11,000 – ரூ.45,100,
இளநிலை உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.10,000 – ரூ.42,500,
செயலாளர் பதவிக்கு ரூ.15,000 – 47,600 சம்பளம் வழங்கப்படும்.

அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.

ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் வரும். 01.12.2023 ஆகும்.

எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு 24.12.2023 அன்று நடைபெறும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க
https://www.drbchn.in/
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here