கள ஆய்வில் வேட்பாளர் நிலவரம்!

706

பெயர் – KRG. பாண்டியன்

தந்தை பெயர் – KR. கணேசன் (முன்னாள் அஇஅதிமுக எம்ஜிஆர் மன்ற செயலாளர்)

படிப்பு – பள்ளி படிப்பு

போட்டியிடும் கட்சி – அஇஅதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)

போட்டியிடும் பதவி விவரம் வார்டு எண், பகுதிகள் –
41ம் வார்டு
குறிஞ்சி நகர்
பாலாஜி நகர்
ஈவேரா நகர்
முனிக்கோவில் காலனி
பொன்நகர்
சாலுவன் நகர்
சேங்கை தோப்பு

பலம் – ஏற்கனவே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வார்டு பகுதி மக்கள் அனைவருக்கும் அறிந்த முகம் என்பதால் கூடுதல் பலம்.. கடந்த முறை வார்டில் பல்வேறு 2 கோடி செலவில் 5 லட்சம் கொள்ளவு கொண்ட மேல்நிலைப் அமைத்து கொடுத்தது, பல மினி தண்ணீர் டாங்குகள் அமைத்தது, மருப்பணி சாலையில் இருந்து மேட்டுப்பட்டி வரை உள்ள சாலையை துரிதப்படுத்த நகராட்சி போராட்டம் முன்னெடுத்து, கஜா புயல் நிவாரண உதவிகள் போன்றவை வேட்பாளர் பலம்

வார்டில் உள்ள பொதுமக்கள் எதிர்பார்ப்பு – குண்டு குழியுமாக இருக்கும் சாலைகள் சீரமைப்பு, குடிநீர் பற்றாக்குறை சரிசெய்தல் , வீதிக்கு வீதி தெருவிளக்கு அமைத்தல், பாதாள சாக்கடை திட்டம் துரிதப்படுத்த வேண்டும் போன்றவை வார்டு மக்கள் எதிர்பார்ப்பு..

வேட்பாளர் உறுதி மொழி- விடுப்பட்டுள்ளன சாலைகள் அனைத்திலும் தார் சாலை அமைக்கப்படும், மேட்டுப்பட்டி – டிவிஎஸ் கார்னர் மருப்பணி சாலையில் நகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், வார்டு மக்கள் தங்கள் சொந்த தேவைகளுக்கு JCB, டிப்பரை தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் போன்றவை

பலவீனம் – எதிர் கட்சியாக களத்தில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு மாற்று கட்சிகள் இதே வார்டில் களம் காணுதல் போன்றவை

வெற்றி வாய்ப்பு – பிரகாசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here