இன்றைய செய்திகள் சில

357

நியூஸ் நவ் தமிழ்நாடு

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நாளை காலை ஆலோசனை.

ஆதிதிராவிட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு துணை நிற்கும்: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க அதிமுகவினர் மீது பொய் வழக்கு, ஊழல் குற்றச்சாட்டுகள் என திமுக அரசு செயல்பட்டு வருகிறது – தமிழக ஆளுநரை சந்தித்து அதிமுக மனு.

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 70.30 லட்சம் பேர் விண்ணப்பம்.

சாதியை காரணம் காட்டி வளர்ச்சியை தடுக்கக்கூடாது – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேச்சு.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,702 பேருக்கு கொரோனா உறுதி 29 பேர் சிகிச்சை பலனின்றி பலி.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் வரும் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியீடு – தேர்வுத்துறை.

ஆக.23 முதல் தற்காலிக 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் – தமிழக அரசு

சொத்து குவிப்பு வழக்கில் 3வது நீதிபதி விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் விளம்பரத் தூதரானார் எம்எஸ்.தோனி.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் – மத்திய அரசுக்கு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை.

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது  நண்பர் ஆகியோரின் ஜாமின் வழக்கு ஆகஸ்ட் 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

எம்பி எம்எல்ஏக்கள் மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசு ஆங்கிலத்துலேயே பதில் எழுத வேண்டும் : மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கொடநாடு கொலை விவகாரம்; யாரையும் பழிவாங்கும் அவசியமில்லை – கனிமொழி எம்பி.

தமிழ்நாட்டுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இன்னும் தேவையான தடுப்பூசிகளை வழங்கவும் தயாராக உள்ளது – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.23 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் : திமுக வட்ட பிரதிநிதி (முன்னாள் கவுன்சிலர்) உட்பட 3 பேர் கைது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் துணி துவைக்க சென்றபோது நீரில் மூழ்கி 2 பெண்கள் உயிரிழப்பு.

இந்தியாவுல வாழ பிடிக்கலனா தாராளமா ஆப்கானிஸ்தான் போகலாம் – பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் சர்ச்சை பேச்சு.

சென்னை அண்ணா நகரில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது.

நந்தனத்தில் உள்ள நிதித்துறை வளாகத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்படும் – தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மின்னணுக் கருவிகள் இறக்குமதியில் வரி ஏய்த்த வழக்கில் வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்தில் 300 கோடி ரூபாயைச் செலுத்தியது சாம்சங்.

அசதாபாத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியுடன் சுதந்திர தின பேரணி நடத்திய மக்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு.
நடிகர் மம்மூட்டி, மோகன்லாலுக்கு கோல்டன் விசா : ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்.

ஆப்கானிஸ்தானில் ஊடகத்தில் பணியாற்றிய பெண்களை பணி நீக்கம் செய்த தாலிபான்கள்.

‘இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்’ என பெயர் மாற்றம் : தலிபான்கள் அறிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here