அறந்தாங்கி தினமணி செய்தியாளர் கார்த்திகேயன் சாலை விபத்தில் உயிர் இழப்பு..

1346

அறந்தாங்கி அ. கார்த்திகேயன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியின் தினமணி நாளிதழ் பகுதிநேர நிருபர் அ. கார்த்திகேயன் (54) சாலை விபத்தில் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

திருச்சிக்குத் தனது மகனின் மருத்துவப் பரிசோதனைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருச்சி எம்ஐஇடி கல்லூரி அருகே லாரி மோதி விபத்து நேரிட்டது.

இதில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி கார்த்திகேயன் உயிரிழந்தார்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறவுள்ளது.

நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here