Home அரசியல் அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!

109

அதிமுகவில் அதிரடி: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்
5000 பேர் இணையும் பிரம்மாண்ட விழா!

புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் 5000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் மாபெரும் விழா, கீரனூர் அண்ணா சிலை முன்பு, 13.05.2026 திங்கள்கிழமை அன்று நடைபெற உள்ளது.
கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர்களை வரவேற்று சிறப்புரையாற்றுகிறார்.
முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர்அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் ஒன்றிய செயலாளருமான K.K. அன்புச்செல்வன் அவர்கள் தலைமையில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 5,000-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ள உள்ளனர்.
இந்த இணைப்பு விழா குறித்து டாக்டர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் பலத்தை நிரூபிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்த விழாவிற்குத் தொண்டர்களும், பொதுமக்களும் அலைக்கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பிரம்மாண்ட ஏற்பாட்டினால் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!