சென்னை, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி வருமாறு:- விஜய் மக்கள் இயக்கம் என்பது நான் ஆரம்பித்த அமைப்பு. அதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய யாரிடமும் அனுமதி கேட்க தேவை இல்லை. விஜய் இப்போது உச்ச நட்சத்திரமாக மாறினாலும் எனக்கு குழந்தைதான். அவருக்கு என்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை ஒரு தந்தையாக செய்து கொண்டு இருக்கிறேன். எதையும் அவரிடம் கேட்டு செய்ய வேண்டும் என்று இல்லை. ரசிகர் மன்றம் ஆரம்பித்தபோது அவரிடம் கேட்கவில்லை. அவருக்கு எது நல்லதோ அதை செய்கிறேன். அவருக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்பா செய்தது நல்லதுதான் என்று பிறகு புரிந்து ஏற்றுக்கொள்வார் என்பது எனது நம்பிக்கை. தனது பெயர், புகைப்படம் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் கூறியிருக்கிறார். நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்ப நினைத்தால் அனுப்பட்டும். அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தால் அது வரலாறு. பெருமைதான். நான் நல்லதுதான் செய்து இருக்கிறேன். எதிர்விளைவு பற்றி சிந்திக்கவில்லை. நான் வெளிப்படையான மனிதன். நான் ஆரம்பித்தது எதிலும் தோற்றது இல்லை. கடவுள் இருக்கிறார். சினிமா பாதிக்கும் என்பதால் அவரை கட்சியில் இணைக்கவில்லை. 10 வருடத்துக்கு முன்பே விஜய்யிடம் நான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியிருக்கிறேன். அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன். ஆரம்பித்து இருக்கிறேன். வருகிற தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை. 8 மாதமாக திட்டமிட்டு இப்போது கட்சியை பதிவு செய்து இருக்கிறேன். தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. அதாவது விஜய் ஒரு விஷ வலையில் சிக்கி இருக்கிறார். அதில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவேன். கூட இருப்பவர்கள் குழி பறிக்கிறார்கள். நான் அவரோடு இருந்தால் பிழைப்பு நடத்த முடியாது என்று நினைத்து என்னை பற்றி தவறாக சொல்லி அவருடன் நெருங்க விடாமல் செய்கிறார்கள். நல்லவன் மாதிரி நடிக்கின்றனர். விஜய்க்கு விரைவில் உண்மை தெரியவரும். அப்பா நல்லதுதான் செய்து இருக்கிறார் என்று அப்போது உணர்வார். இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
- Advertisement -
Latest article
அம்மோனியா வாயுக் கசிவு – தமிழக அரசு சார்பில் அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்.
அம்மோனியா வாயுக் கசிவு - தமிழக அரசு சார்பில் விளக்கம்.
திருவள்ளூரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் பைப் லைனில் ஏற்பட்ட வாயுக்கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது.
அம்மோனியா வாயுக் கசிவு காரணமாக 5 பெண்கள் உயிரிழப்பு;...
புதுக்கோட்டை அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் வீ. பழனிவேல் முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு...
இன்று நீக்கம் / இனைப்பு பற்றி லாட்டரி மாபியாவின் சோபாவில் அமர்ந்து திடீர் ஞானோதயம் பெற்று அறிக்கை வெளியிட்டுள்ள மாஜி மந்திரி விஜயபாஸ்கர் MLA அவர்களுக்கு புதுக்கோட்டைவடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு...
அஇஅதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்...
Dr C.Vijayabaskar’s Tweet 👇
உழைக்கும் உண்மைத் தொண்டர்களைஎதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையேகுற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பதுஎத்தனை பேரை நீக்கினோம்என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்என்பதைத்தான்.
LeadershipMatters
https://x.com/i/status/2066429523961454834














