Home அரசியல் தனித்தன்மையை வளர்த்துக்கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!

தனித்தன்மையை வளர்த்துக்கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!

14

தனித்தன்மையை வளர்த்துக்கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்கள்: மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை

தவெக சார்பில் 4-வது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி மாணவி ஹரிஷ்தாவுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

சென்னை: ‘தனித்தன்​மையை வளர்த்​துக் கொண்டு தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்​கள்’ என தவெக​வின் 4-ம் ஆண்டு கல்வி விருது வழங்​கும் விழா​வில் மாண​வர்​களுக்கு முதல்​வர் விஜய் அறி​வுரை வழங்​கி​னார்.

தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் 4-வது ஆண்​டாக 10 மற்​றும் 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வு​களில் மாவட்​ட அள​வில் முதல் 3 இடங்​களைப் பெற்ற மாண​வர்​களுக்கு கல்வி விருதுகள் வழங்​கும் விழா சென்னை நீலாங்​கரை​யில் உள்ள ஆர்​.கே. கன்​வென்​ஷன் சென்​டரில் நேற்று நடைபெற்​றது.

இவ்​விழாவுக்கு பொதுச்​ செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான ஆனந்த் தலைமை தாங்​கி​னார். அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜூ​னா, செங்​கோட்​டையன், வெங்​கட்​ரமணன், ராஜ்மோகன் ஆகி​யோர் மாண​வர்​களை வாழ்த்திப் பேசினர்.

முதல் கட்​ட​மாக அரியலூர், கடலூர், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை மற்​றும் விழுப்​புரம் ஆகிய 5 மாவட்​டங்​களைச் சேர்ந்த 186 மாண​வர்​களுக்கு தவெக தலை​வ​ரும், முதல்​வ​ரு​மான விஜய், கல்வி ஊக்​கத்​ தொகை​யாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்​றிதழை வழங்கி கவுர​வப்​படுத்​தினார்.

மாணவிக்கு நெக்லஸ்

மாநில அளவில் 12-ம் வகுப்​பில் முதலிடம் பெற்ற அரியலூரைச் சேர்ந்த மாணவி ரிக்​‌ஷி​தாவுக்கு முதல்​வர் விஜய் ஊக்​கத்​ தொகை மற்றும் தங்க நெக்​லஸை​ பரி​சாக வழங்கினார்.

அப்போது மாண​வி​ கேட்​டுக்​ கொண்​டதன்பேரில், முதல்வரே அவருக்கு நெக்​லஸை அணிவித்​தார். தொடர்ந்​து, திரு​வண்​ணா​மலை மாற்​றுத்​திற​னாளி மாண​வர் சோனேஷ், கள்​ளக்​குறிச்சி மாற்​றுத்​திற​னாளி மாணவி ஹரிஷ்தா ஆகி​யோ​ருக்கு முதல்​வர் விஜய் சான்​றிதழ் மற்​றும் கல்வி உதவித் தொகை வழங்​கி​னார்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது: நான் இங்கு முதல்​ அமைச்​ச​ராகவோ, அரசி​யல் பேசவோ, வாக்​குக் கேட்​கவோ வரவில்​லை. எப்​போதும்​போல உங்​கள் அண்​ண​னாக வந்​திருக்​கிறேன். உங்​களின் அன்​பும் ஆதர​வும்​தான் எனக்கு அடித்​தளம்.

இப்​போதைக்கு உங்​களுக்கு அரசி​யலும் கட்​சி​யும் தேவை​யில்லை என்று நினைக்​கிறேன். நன்​றாகப் படித்​து, வாழ்க்​கை​யில் பெரிய அளவில் சாதிக்க வேண்​டும். உயர்ந்த இடங்​களுக்​குச் செல்ல வேண்​டும். உங்​களுக்​குப் பிடித்​த​மான வாழ்க்​கையை அமைத்​துக்​கொள்ள வேண்​டும்.

அதன்​பிறகு நமது ஊர், சமூகம், தமிழ்​நாடு குறித்து யோசிக்​கலாம். உங்​களை நம்​பித்​தான் உங்​கள் பெற்​றோரும், நமது சமூக​மும் இருக்​கிறது. நானும் உங்​களை நம்​பித்​தான் இருக்​கிறேன். ஏன், தமிழ்​நாடே உங்​களை நம்​பித்​தான் இருக்​கிறது.

ஒவ்​வொரு​வ​ரும் தனித்​தன்​மையை வளர்த்​துக் கொள்ள வேண்​டும். உங்​களைத் தடுக்​கப் பலர் முயற்சி செய்​ய​லாம். தடைகளைக் கண்டு துவண்​டு​வி​டா​மல், தடைகளைத் தாண்டி வெற்றி பெறுங்​கள்.

உங்​களது இலக்​கில் உறு​தி​யாக இருங்​கள். அதே​போல், நண்​பர்​களுக்​குள் பரஸ்பர மரி​யாதை இருக்க வேண்​டும்.

லஞ்​சம், ஊழல் மற்​றும் போதைப் பொருட்​களின் பக்​கம் சென்​று​வி​டாதீர்​கள். எந்​தத் தவறான பழக்​கத்​துக்​கும் அடிமை​யாகக் கூடாது.

உங்​களோடு நானும் இருக்​கிறேன்; என்​னோடு நீங்​களும் இருக்​கிறீர்​கள். இந்​தத் தொடர்பு எப்​போதும் நீடிக்​கும். நம்​பிக்​கை​யுடன் இருங்​கள். நல்​லதே நடக்​கும்; நல்​லது மட்​டுமே நடக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அறுசுவை விருந்து

இவ் விழாவில் பங்​கேற்ற மாண​வர்​கள் மற்​றும் அவர்​களது பெற்​றோருக்கு அறுசுவை உணவு பரி​மாறப்​பட்​டது. இதில், பனங்​கருப்​பட்டி பருத்​தி​ப்பால் அல்​வா, ஸ்பெஷல் ரொட்டி மால்​பு​வா, வாணி​யம்​பாடி ஸ்பெஷல் கறிப்​பலா பிரி​யாணி, ரைத்​தா, சாதம், முருங்​கைக்​காய் சாம்​பார், வெண்​டைக்​காய் காரக்​குழம்​பு, மிளகு ரசம், தென்​னங்​குருத்து பொரியல், உருளைக்​கிழங்கு வறு​வல், எரிசேரி, புடலங்​காய் சில்​லி, அப்​பளம், ஜவ்​வரிசி வடை, கருப்பு கவுனி அரிசி பாயாசம், மாங்​காய் இஞ்சி ஊறு​காய், ஐஸ்​கிரீம்​ ஆகிய​வை இடம்​ பெற்​றிருந்​தது. காலை உணவாக இட்​லி, பொங்​கல் வழங்​கப்​பட்​டது

error: Content is protected !!