Home அரசியல் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க புதிய நிர்வாக குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க புதிய நிர்வாக குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

27

பொது தீட்சிதர்கள் வசம் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க இரு நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழுவையும் நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.

நிர்வாக கண்காணிப்பு குழுவாக பாரதிதாசன் (ஓய்வு பெற்ற நீதிபதி), சுரேஷ்குமார் (ஓய்வு பெற்ற நீதிபதி), சி.ராஜேந்திரன் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ்) ஆகியோர் நியமனம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு.

கோயிலின் உண்மையான வருமானம், கணக்கு வழக்குகளை பொது தீட்சிதர்கள் 12 ஆண்டுகளாக தரவில்லை.

கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மனோகரன் கருத்து.

சிதம்பரம் கோயிலின் கனகசபையில் நின்று பக்தர்கள் அனைவரும் தரிசிக்கவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு அளிப்பதை நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும்.

புதிய நிர்வாகக் குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அரசுத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

-NEWS Now …

error: Content is protected !!