2025 ஆம் ஆண்டு முடிவுடைய இருப்பதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் லிங் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை!

13

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு சமூக வலைதளங்கள் மூலம்,2025 ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,இந்த உதவி தொகைக்கான காலம் விரைவில் முடிவடைய உள்ளது என்ற வாசகத்தோடு ஒரு லிங்கையும் மர்ம நபர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும் அத்தகைய லிங்குகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் மீறி பயன்படுத்த முற்படும்போது தங்களது தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படும் எனவும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஒருவேளை இதனால் யாரும் பாதிக்கப்பட்டால் 19 30 என்ற கட்டணம் இல்லாத எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.