தவெக-வின் தீர்மானங்கள்!

6

தவெக-வின் தீர்மானங்கள்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம்

பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு
அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும்

தமிழக மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் கைதை கண்டித்து தீர்மானம்

தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான வாக்கு உரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கோரும் தீர்மானம்

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, அதற்கு காரணமான விரோத ஆட்சியாளர்களுக்கு கண்டனம்

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தமிழ்நாட்டில் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் பணிகள் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை செய்து முடிக்க வேண்டும்

பாதுகாக்கப்பட்ட ராம் சார் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்

மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருக்கும் அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்

கட்சி மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் அவதூறு பரப்பும் ஆளும் கட்சி கைகூலிகளுக்கு கண்டனம்

தமிழ்நாட்டில் தொழில்துறை குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டி தீர்மானம்.