மக்களவைத் தேர்தலில் திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
பாஜகவிற்காக மோடி, அமித் ஷா, நட்டா என பலர் வந்து தமிழ்நாட்டில் பரப்புரை செய்தனர்.
திமுகவிற்கு அவர்கள் கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டனர்; தனியாகவே பரப்புரை செய்தேன்.
2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 0.62% வாக்குகளை 2024இல் குறைவாகவே பெற்றுள்ளது.
திமுக 2019இல் பெற்றதை விட 6.59% குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.
திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
ஆட்சி, அதிகாரம்தான் தேவையென்றால் தேசிய கட்சியுடன் சென்றிருப்போம், மாநில கொள்கையே முக்கியம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை.
அதிமுகவிற்கு பின்னடைவு என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்.
அதிமுக வளர்ந்துதான் வருகிறது; பாஜக பிரிந்து சென்றதால்தான் அதிமுகவிற்கு 1% வாக்குகள் அதிகரிப்பு.
2026 சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- எடப்பாடி பழனிசாமி.
எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் பிரச்னை என திட்டமிட்டு பொய் பரப்பி குழப்பம் விளைவிக்க முயற்சி.















