சென்னையில் 13 இடங்களில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்!

430

தனியார் ஏற்றுமதி நிறுவனம் ரூ.225 கோடி நிதி மோசடி செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் உள்பட 13 இடங்களில் ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.