

தமிழக பாஜக கொண்டாடும்
நம்ம ஊரு பொங்கல்
விழாவை முன்னிட்டு,
புதுக்கோட்டை நகரில்
மச்சுவாடி,மாப்பிள்ளையார் நகர், காமராஜபுரம்,அசோக் நகர்,உசிலங்குளம்,
ராஜகோபாலபுரம்,
பாலன் நகர் உள்ளிட்ட 12 பகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா
2000க்கும் அதிகமானோர் பங்கேற்புடன்,
மாவட்ட துணைத் தலைவரும்,
சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான
ஏவிசிசி கணேசன்,சட்டமன்ற பொறுப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் தலைமையில், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர்
கார்த்திக்,நகரத் தலைவர் சுப்பிரமணியன்,பொதுச் செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில்
வெகு சிறப்பாக நடைபெற்றது!
பேண்ட் வாத்தியங்கள் முழங்க,பட்டாசுகள் வெடிக்க, நூற்றுக்கணக்கான வாகனங்களில், நிர்வாகிகள்
நகர்வலமாகச் சென்று, பாஜக
கொடியேற்றி வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, வாக்குச் சாவடி
கிளைத் தலைவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து
கெளரவித்தனர்.மாவட்ட,நகர,
ஒன்றிய நிர்வாகிகள்,அணி, பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!
















