Site icon News now Tamilnadu

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என மக்கள் இயக்கம் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிடுவதாக மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார்.  வேட்பு மனு தாக்கலின்போது விஜய் படம் பதிக்கப்பட்ட கொடியினை எடுத்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் மன்றத்தை சேர்ந்த 51 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்வதால் இன்னும் அதிகமானவர்கள் வெற்றி பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்… 

Exit mobile version