புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மற்றும் ஆதனக்கோட்டையில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று வழிப்பறி சம்பவங்களில் திருடர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நகை பணம் மற்றும் செல்போன் கைப்பற்றிய தனிப்படை போலீசாரை பாராட்டிய புதுக்கோட்டை மாவட்ட எஸ் பி வந்திதா பாண்டே ஐபிஎஸ் !

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காவல் நிலைய சரகம் சவேரியார் பட்டி பிரிவு சாலை, விராலிப்பட்டி செல்லும் பிரிவு சாலை ஆதனக்கோட்டை காவல் சரகம் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கல்லுப்பட்டி சேர்ந்த மகாலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் செல்லப்பன் பேட்டையை சேர்ந்த ஜோதி பாஸ்கர் மற்றும் வளவம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் ஆகியோரை 06.06.24ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மூகமுடி நபர்கள் வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளை காண்பித்து மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்..

மேற்படி இச்சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை காவல் நிலைய குற்ற எண் 180/24 u/s 392IPC 181/24 u/s 392 IPC, மற்றும் ஆதனக்கோட்டை காவல் நிலைய குற்ற எண் 51/24 u/s 392 IPC, ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் எதிரிகளான தஞ்சாவூரை சேர்ந்த செல்வம், ராமச்சந்திரன், அறிவழகன் என்ற குட்டார் ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்..
மேலும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் எதிரிகளை கைது செய்து வழக்கில் தொலைந்து போன ஆறு செல்போன்கள், தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பணம் பத்தாயிரம் ஆகியவற்றை எதிரிகளிடமிருந்து கைப்பற்றி சிறப்பாக பணிபுரிந்த தனிப் படை காவல்துறையினரை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் திருமதி. வந்திதா பாண்டே இகாப., அவர்கள் நேரில் வரவழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார். .