2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கூடாது

1233

– டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த ஆ.ராசா ,கனிமொழி ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல்

இவ்வழக்கிலிருந்து ராசா,கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன

இவ் வழக்கில் பதிலளிக்குமாறு ராசா ,கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் இவ்வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது இந்த வழக்கை விரைந்து விசாரிக்க ராசா மற்றும் கனிமொழி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

இன்றைய விசாரணை நிறைவடைந்து வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது