வேட்டையன்’ பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை – போலீஸ் விசாரணை!

19

வேட்டையன்’ பட பாணியில் நூதன மோசடி! புதுக்கோட்டையில் QR Code-ஐ மாற்றி ஒட்டி கைவரிசை – போலீஸ் விசாரணை!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் உள்ள கடை ஒன்றில் சினிமா பாணியில் நூதன மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. கடையில் பணப் பரிவர்த்தனைக்காக வைக்கப்பட்டிருந்த QR Code பலகையின் மீது, மர்ம நபர் ஒருவர் தந்திரமாகத் தன்னுடைய வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட QR Code ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றுள்ளார்.
இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், கடை உரிமையாளருக்குச் செல்லாமல் அந்த மர்ம நபரின் கணக்கிற்குச் சென்றுள்ளது. ‘வேட்டையன்’ படத்தில் வருவது போன்ற இந்த நூதன மோசடியைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், உடனடியாக இதுகுறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.