விராலிமலை மக்களுக்கு பரிசு! விஜயபாஸ்கர் நெக்ஸ்ட் மூவ்!

10

அதிமுகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது தொகுதி மக்களுக்கு கிஃப்ட் பேக் ஒன்றை விநியோகம் செய்துள்ளார். அதில் என்னென்ன இருக்கின்றன,

விராலிமலை மக்களுக்கு விஜயபாஸ்கர் பரிசு!
தனது விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சி. விஜயபாஸ்கர் செய்திருக்கும் விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 5 ஆயிரத்து எழுநூற்று 23 வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கிஃப்ட் பேக் ஒன்றை வீடு வீடாக சென்று வழங்கியிருக்கிறார். அதில், ஸ்டெய்லஸ் ஸ்டீல் கண்டய்னர், குலாப் ஜாமூன் டின், ஒரு பேனா, நன்றி தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு பிரிண்டட் நோட் ஆகிய 4 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மதிப்பு 300 ரூபாய் இருக்கும் என்கின்றனர். அந்த நோட்டில் தான் எப்போதும் தொகுதி மக்களுக்கு நன்றியுள்ள நபராக இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.