Site icon News now Tamilnadu

யூட்யூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்த பப்ஜி மதனை போலீஸார் தேடி வந்த நிலையில் தருமபுரியில் மதனை கைது செய்துள்ளனர்

ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணைக்கு மதனை போலீசார் அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனால் அவரது மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்நிலையில் மதனின் சொகுசு கார் மற்றும் சொத்துக்களை முடக்கியதுடன், மதனை தேடும் பணியையும் போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.இந்நிலையில் தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Exit mobile version