Home அரசியல் மானியக் கோரிக்கை தமிழக சட்டமன்றத் கூட்டத் தொடர்!

மானியக் கோரிக்கை தமிழக சட்டமன்றத் கூட்டத் தொடர்!

3

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் (முன்னர் 21 நாட்கள் என்ற தகவல் வந்தது) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 170 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 15 நாட்கள் நடைபெற்றது. விவாதத்தில் மொத்தம் 165 உறுப்பினர்கள் 63.58 மணி நேரம் பேசியுள்ளனர்; இதில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 51 பேர் 13.28 மணி நேரமும், திமுக உறுப்பினர்கள் 38 பேர் 23.35 மணி நேரமும், அதிமுக உறுப்பினர்கள் 37 பேர் 12.58 மணி நேரமும், பிற கட்சி உறுப்பினர்கள் 39 பேர் 13.52 மணி நேரமும் உரையாற்றியுள்ளனர். சட்டமன்றத்தில் மொத்தம் பெறப்பட்ட 14,399 கேள்விகளில் 170 உறுப்பினர்களின் 3,455 நட்சத்திரக் குறி கேள்விகள் கேட்கப்பட்டு, 23 கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டதுடன் 242 துணைக் கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. மேலும், கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் 45, நேரமில்லா நேரக் குறிப்புகள் 59, தகவல் கோரும் அறிவிப்புகள் 59 ஆகியவை பரிசீலிக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தொடரில் மொத்தம் 13 அரசினர் சட்டமுன்வடிவுகள் (மசோதாக்கள்), 8 அரசுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் உரையாற்றிய 17 அறிக்கைகள் உட்பட மொத்தம் 18 விசேஷ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!