மதுரைக்கு மல்லிகைப்பூ, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பது போல புதுக்கோட்டைக்கு மணல் கொள்ளையா? துணை போகும் அரசு அதிகாரிகள்!

5

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, புனங்குளம், அரியானிப்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக 20 ஏக்கருக்கு மேலாக 50 அடி ஆழத்தில் பட்டப் பகலிலேயே கனிமவள கொள்ளை – கண்டுகொள்ளாத அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கனிமவள கொள்ளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை புனரங்குளம் கிராம பகுதியாகும். இந்தப் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சண்முகம் என்ற நபர் குத்தகைக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட பத்து மடங்கு அதாவது 50 அடிக்கு மேலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.

இதனை கனிமவளத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
புனராங்குளம் குவாரிக்கு அடுத்து அரியானிப்பட்டி கிராம பகுதியில் எந்த ஒரு அனுமதி இல்லாமல் 20 மீட்டர் ஆழத்திற்கு கிராவல் மண் திருட்டு பட்டப் பகலிலேயே நடைபெற்று வருகிறது.

குறிப்பாக 6க்கும் மேற்பட்ட லாரிகளை கொண்டு ராட்சத பொக்லின் இயந்திரத்தின் உதவியுடன் பட்டப்பகலிலேயே கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே இந்த கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது
ஒரு சில அதிகாரிகள் கையூட்டு பெற்று கண்டு கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதால் காவிரி ஆறு மற்றும் நீர்வள ஆதார பாதுகாப்பு சங்க தலைவர் சுடலைக்கண்ணு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமும் கனிமவளத்துறை அதிகாரியிடமும் கனிம வளக் கொள்ளையை தடுக்க வேண்டும் என புகார் மனுவும் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 50 அடிக்கு மேலாக கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனை கனிமவளத் துறையினரும் மாவட்ட நிர்வாகமும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.