மணல் கடத்தல்: கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை – உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

1130

மதுரை: மணல் கடத்தல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர்கள் மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,…

“நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தாலும் மணல் எடுப்பது தொடர்பாக தினசரி 10 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

சவுடு மணல் அள்ள அனுமதி பெற்று வேறு மணல் எடுக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மணல் அள்ளும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால், மாவட்ட கலெக்டர்களுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்”. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.