Site icon News now Tamilnadu

பொறுப்பேற்ற நாளில் அதே உத்வேகத்துடன் மீண்டும் களத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி.ஆனந்த்! இரண்டாம் நாளில் அதிரடி ஆய்வு !

“விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம சிறுமி மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தானாக முன்வந்து வழக்கு விசாரணை” (SUO MOTO)

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் மூத்த உறுப்பினராக மீண்டும் பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த Dr.R.G.ஆனந்த் அவர்கள், தனது முதல் விசாரணையை மேற்கொள்ள வருகின்ற 14 ஆம் விழுப்புரம் வருகிறார். (14-03-2021)

Dr.R.G.ஆனந்த் அவர்கள் தலைமையிலான குழுவினர் முதலில் சம்மந்தப்பட்ட ஆசிரமம் சென்று அங்கு பணிபுரியும் பணியாளர்கள், தங்கியுள்ள குழந்தைகளுடன் கலந்துரையாட உள்ளார், அதனை தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட சிறுமியை சந்தித்து மருத்துவர் என்ற முறையில் உடல் நலம் விசாரித்து, இறுதியாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தாக்குதல்களை Dr.R.G.ஆனந்த் அவர்கள் தலைமையிலான குழுவினர் உன்னிப்பாக கவனித்து, விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது, விரைவில் பல அதிரடி நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கலாம். …

Exit mobile version