


பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாநகராட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக அதற்கான கருத்தடை மையம் மற்றும் தடுப்புசி செலுத்தும் கட்டிடத்தினை திறந்து வைத்து சிறப்பித்தார்கள்
இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு வெள்ளாறு ஒத்தபட்டி அருகில் புதிய கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், மாநகர மேயர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாத மாநகர கவுன்சிலர்கள் வைத்து கொண்டு அவசர அவசரமாக திறந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் மாற்றுக்கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது ..
69 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்தை பொதுமக்கள், அந்தப் பகுதிமக்கள் அழைப்பு ஏதும் இல்லாமல் அவசர அவசர திறக்கப்பட்டது கேள்வியாக எழுந்துள்ளது..
திறந்த சற்று நேரத்தில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது …














