பொதுமக்கள் பாராட்டு மழையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் CVB அறக்கட்டளை..

798

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் க்கு மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்களால்  சுகாதாரத்துறை அமைச்சர்  பதவி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..  அமைச்சராக பதவி ஏற்ற நாட்கள் முதல் தற்போது வரை தனது சுறுசுறுப்பான  வேலைப்பாடுகள் மூலம்  அனைவரின் பாராட்டுதலையும்   வரவேற்பையும் பெற்றவர்..  குறிப்பாக பல்வேறு இயற்கை இடர்பாடுகள் காலங்களில் கஜா புயல்  தொடங்கி  நிவர் புயல் வரையும்  ஆறு மாத காலமாக கொரோனா நோய் எதிர்ப்பு போராட்டத்தில் தனது துரித செயல்பாடுகளால், நேர்த்தியான திறம்பட ஆற்றல் மூலம் செயல்படுத்தி கொரோனா தொற்று நோய் கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.. குறிப்பாக பாரத பிரதமர் மோடி, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜேபி நட்டா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,   துணை முதல்வர் ஓபிஎஸ்,  தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன்  உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அனைத்து சமூக நல தரப்பினர் பாராட்டு வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் செயல்பட்டது பாராட்டுக்குரிய செயலாக பேசப்பட்டு வருகிறது.. 
தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  ஆதரவு மற்றும் விஸ்வாச மிக்க இளைஞர்களால் சி விஜயபாஸ்கர் பவுண்டேஷன் சுருக்கமாக CVB பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை  ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.. 
குறிப்பாக தற்போது   அமைச்சரின் சொந்தத் தொகுதியான விராலிமலை தொகுதி உட்பட்ட பகுதிகளில் CVBFoundation சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “ஒளிமயமான வாழ்வு” கண் பரிசோதனை முகாம்கள் மூலமாக  தொகுதி முழுவதும் கண் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று பல்வேறு இடங்களில் இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. 
இந்த CVB அறக்கட்டளையின்  உள்ள இளைஞர்கள் நம்மிடம் பேசுகையில் இது ஆரம்பம் தான் என்றும் அமைச்சர் உத்தரவின் பேரில் அடுத்து அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அடுத்து அடுத்து பல்வேறு நலத்திட்ட பணிகளை CVB அறக்கட்டளை மூலம் செய்ய உள்ளதாக ஆர்வமுடன் தெரிவித்துள்ளார்கள்.. 
மக்கள் சேவை செய்ய அரசியலை தாண்டி இது போன்ற அறக்கட்டளை மூலமும் மக்கள் சேவை செய்யலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் CVB அறக்கட்டளை மூலம் பொதுமக்களுக்கு நலத்திட்ட பணிகளை செய்து வரும் இளைஞர்களை நாமும் பாராட்டுவோம். ..