Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் பின்வரும் கைபேசி எண்ணிற்கு 9443314417 புலனம் (Whatsapp) மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Exit mobile version