புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு வை. முத்துராஜா அவர்கள் கலந்துகொண்டு விதைக்கலாம் அமைப்பிற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு கொடைச் செம்மல் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி அவர்கள் சமூக சேவை அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்தவர்களுக்கு இயற்கை காவலர் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் ஐடியா பிளஸ் நிறுவனர் திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றி அமைப்பிற்கு ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். நிகழ்வில் கிராமிய இசை பாடல்கள் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி தம்பதியினர், மூத்த வழக்கறிஞர் திரு. சொக்கலிங்கம், கவிஞர் மூ.கீதா, விதைக்கலாம் அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு நாகபாலாஜி அவர்கள் நன்றி கூறினார்
Home சுற்றுச்சூழல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் “விதைக்கலாம்” அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா...
- Advertisement -
Latest article
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட, ரூ.18 லட்சம் செலவிட்டு விருப்ப மனு தாக்கல் செய்து...
அதிமுகவின் கவனத்தை ஈர்த்த ஒன்றிய செயலாளர்….
எடப்பாடி பழனிசாமி 120 தொகுதிகளில் போட்டியிட, ரூ.18 லட்சம் செலவிட்டு விருப்ப மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்த அதிமுக ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன்.
தொகுதிக்கு ரூ.15,000 என...
தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார்.
தவெகவில் இணைந்தார் சவுக்கு சங்கர் பேட்டியால் சிறைச்சென்ற யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு!
தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இணைந்தார். அவர் பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்து இணைந்துள்ளார். தற்போது சவுக்கு...
மாநில அளவில் நடைபெற்ற போலிஸ் வாத்திய இசை குழு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோவை மாவட்டம் ஆனைமலை சரவணம்பட்டி...
தமிழ்நாடு போலீஸ் வாத்திய இசை குழு போட்டியில் 33 மாநிலங்கள் ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற இசை போட்டியில் தமிழ்நாட்டில் கலந்து கொண்ட கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த அலெக்சாண்டர் கோவை...















