Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அஇஅதிமுக வேட்பாளர்களுக்கு பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு அஇஅதிமுக கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீதி வீதியாக ஆதரவு திரட்டினார்..

அப்பொழுது அவர் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து பேசியதாவது

இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் வளர்ச்சி பணிகள் என முழு அளவில் ஏற்றம் பெற்றது அதிமுக ஆட்சியில் தான்

இந்த மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி பல் மருத்துவக் கல்லூரி வேளாண்மை கல்லூரி புதுக்கோட்டை நகராட்சிக்கு புதிய கட்டிடம் சாலை வசதிகள் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை வழங்கியது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் எடப்பாடி ஆட்சியிலும் இந்த சாதனைகள் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்தது

இத்தகைய அஇஅதிமுக நல்ல வேட்பாளர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் உங்களால்தான் வழங்க முடியும் என்கின்ற நகராட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்..

Exit mobile version