புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிர ட்டல்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு இன்று மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டி இருந்தனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவு பேரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் ( துருவன்) மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு ஆட்சித் தலைவர் அலுவலகம் முழுவதும் தற்பொழுது சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது














