Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில். உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது..

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு ஊராட்சியில் அகரப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட “தூய்மை நடைபயணம்” ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. கவிதா ப்ரியா தலைமையில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சி வீட்டு வசதி துணை அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், கவிநாடு மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா மணிகண்டன் மற்றும் அகரப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், அரசு பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டுஉறுப்பினர்கள்,மகளிர் சுய உதவிக் குழுவினர் , தூய்மை பணியாளர்களை உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Exit mobile version