Home அரசியல் புதுக்கோட்டை ஆட்சியர் உதவியாளர் உட்பட 3 பேர் கூட்டணியில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு...

புதுக்கோட்டை ஆட்சியர் உதவியாளர் உட்பட 3 பேர் கூட்டணியில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை காவல் துறையில் புகார் அளிக்கப்படாதது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது!

19

அரசு நத்தம் புறம்போக்கு நில மோசடியில் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி பல லட்சம் ரூபாய் வருமானம் பார்த்த விவகாரத்தில் புகார் அளிக்கத் தயங்கும் மாவட்ட நிர்வாகம் – உயரதிகாரிகளுக்கு தொடர்பா?

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ஐஏஎஸ் உடன்  உதவியாளர் பிரசன்னா இருக்கும் புகைப்படங்கள்!

அரசு நத்தம் புறம்போக்கு இடங்களில் முறைகேடாகப் பட்டா வழங்கப்பட்ட விவகாரத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்து, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை காவல் துறையில் புகார் அளிக்கப்படாதது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் நெட்வொர்க் அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில் கீழ்நிலை ஊழியர்கள் மட்டும் இவ்வளவு பெரிய அளவிலான நில மோசடியைத் தனியாகச் செய்திருக்க முடியாது என்பதால், அவர்களுக்குப் பின்னால் துறை சார்ந்த உயரதிகாரிகள் பலரின் ஆதரவும் பின்னணியும் இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
​

error: Content is protected !!