
புதுக்கோட்டை அருகே போராட்டத்திற்கு தயாராகி வரும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள்..
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் குளவாய்ப்பட்டி கிராமம் அருகே 28 சென்ட் இடம் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் அவர்களுக்கு அடக்க ஸ்தலமாக கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது..
இந்த இடத்தை ஆக்கிரமித்து பட்டா போட்ட சில நபர்கள் மீது 10 ஆண்டுகளாக முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் வாக்குவாதமும் சண்டையும் நீதிமன்றம் வழக்குகளில் ஈடுபட்டனர்..


இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் எதிராகவும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக முஸ்லிம் ஜமாத்தார்கள் கூறி வந்த நிலையில்
இதைத் தொடர்ந்து முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. ..
இதற்கு எதிராக எதிர்மனுதாரர்கள் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்து உயர் நீதிமன்றம் சென்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும்
இதற்கு ஆலங்குடி வருவாய் துறை அதிகாரிகளை எதிர் மனுதாரர்கள் கையில் வைத்துக் கொண்டு இடத்தை சர்வே செய்து இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெற்றது வருவதாக முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் புலம்பி கூறி வருகின்றனர்..
இது சம்பந்தமாக முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் கூறுகையில் மேலும் இந்த இடத்தை தோண்டவும், இதில் 17 முஸ்லிம் ஜமாத்தார்கள் சொந்தமானவர்கள் சடலங்கள் உள்ளதாகவும் அதை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலங்குடி வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்..
இந்த விஷயம் சம்பந்தமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது..
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த வித நடவடிக்கைகளையும் ஈடுபட வேண்டாம் என்று அரசு அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் ஆலங்குடி வருவாய் துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும், வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கும் முத்துப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..















