Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை அருகே கல்லூரி படிப்பு செலவுக்கு பணம் இன்றி தவித்து வந்த மாணவிக்கு நிதி உதவி அளித்த திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா..

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று வந்த நிலையை அறிந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா கடந்த ஆண்டு கல்லூரி படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார் இந்நிலையில் மாணவி தேன்மொழிக்கு இன்று இரண்டாம் ஆண்டு படிப்புக்கு தேவையான 10 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்று வழங்கினார் பணத்தை பெற்றுக் கொண்ட மாணவி தேன்மொழி வாழ்க்கையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்கள் எனக்கு கல்லூரி படிக்க அனைத்து உதவிகளையும் செய்தது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்களுக்கும் வாழ்க்கையில் என்றென்றும் தான் நன்றி கடன் பட்டவர் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த உதவியை வழங்கிய திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் மாணவி தேன்மொழி..

Exit mobile version