Site icon News now Tamilnadu

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கை சிறப்புடன் கையாண்ட மாவட்ட நிர்வாகம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சீரிய மற்றும் துரித நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்புற கடைபிடிக்கப்பட்டது…

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை இன்று (9.1.2022) முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஆணை பிறப்பித்துள்ளாரகள்..

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஆங்காங்கே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறப்புற பணியாற்றினார்கள்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் புதுக்கோட்டை நகர காவல் நிலையம், திருகோகர்னம், கணேஷ் நகர் நகர் காவல் துறையினர் முழுவதும் ரோந்து பணியில் முடுக்கிவிடபட்டனர்..

காலை முதல் மாவட்ட முழுவதும் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்திபன் (ஐபிஎஸ்) ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக மாலையில் சைக்கிளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (ஐஏஎஸ்) முககவசம் அணியாதவர்களிடம் முககவசம் கொடுத்து அணியும்படி கேட்டுக்கொண்டு அறிவுரை வழங்கினார்..

இன்று 9.1.2022 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரட‌ங்கில் மட்டும் அத்தியாவசிய தேவைகளை தவிர ஊர் சுற்றித்திரிந்தவர்கள், முககவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவேளையை கடைபிடிக்காத நபர்கள் மீது 570 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது…

சிறப்புடன் பணியாற்றிய மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.. அவர்களோடு சேர்ந்து newsnowtamilnadu.com செய்தி குழுமம் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது…

Exit mobile version