Site icon News now Tamilnadu

புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணிகளில் தன்னலம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்க காயின் வழங்கி கௌரவித்த நிகழ்வு காண்போரை நெகிழ வைத்தது.

கடந்த ஒராண்டுகளுக்கும் மேலாக கொரோனாவின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள்
தன்னலம் இன்றி தன்னார்வத்தோடு பணியாற்றி வருகின்றனர்.மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் சேவையை பலரும் பல்வேறு விதமாக பாராட்டி வரும் நிலையில் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 10 பேருக்கு தங்கக் காசுகள் வழங்கி அவர்களின் சேவையை பாராட்டினர்.மேலும் இன்றைய இக்கட்டான காலகட்டத்திலும் அர்ப்பணிப்பு உணர்வோடு மக்களுக்காக சேவையாற்றி வரும் அந்த மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் ரோஜா பூக்களை வழங்கியும் கை தட்டியும் தங்களது நன்றியை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.இந்த நிகழ்வு காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது…

Exit mobile version