பட்டுக்கோட்டையில் பெரும் சோகம்

1952

நேற்று இரவு 11 மணி அளவில் பட்டுக்கோட்டை வளவன்புரம் மதுக்கூர் ரோடு 5 ஸ்டார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நடந்த கோர சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஒரு தாய் தன் மகள் மற்றும் 2 பேத்திகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் இரண்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது அனைவரும் சோகத்தில் உள்ளனர்….

நேற்று முழுவதும் ஒரு குடும்பமே வீட்டைவிட்டு வெளியே வராததால் பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர். உரிமையாளர் இந்த வீட்டின் சுவற்றில் உள்ள ஓட்டையின் வழியாக உள்ளே செல்போன் வைத்து பார்த்த பொழுது அனைவரும் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த வீட்டின் உரிமையாளர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் காலையில் பேசிக்கலாம் என்ற நிலையில் இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் திரு. புண்ணியமூர்த்தி அவர்களிடம் நேரில் சென்று சம்பவத்தை விளக்கி கூறினர். உடன் அழைத்து வந்து விசாரித்த வகையில் உறுதி செய்யப்பட்டு பட்டுக்கோட்டை நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள் மற்றும் விஏஓ அவர்களின் நேரடி விசாரணையில் இளைஞர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது தாய் தூக்கில் தொங்கி கொண்டு இருந்த நிலையில் மகள் மற்றும் மகளின் இரு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்கள் வரிசையாக படுக்க வைத்து விட்டு தாய் தூக்கிட்டு இறந்துள்ளார் இதில் மகள் ஏற்கனவே தூக்கில் தொங்கி இறந்த நிலையில் பேத்திகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு நாய்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு மகளைஅவருடைய பிள்ளைகள் உடன் படுக்க வைத்துவிட்டு தூக்கிட்டு இறந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது நேரில் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

காவல்துறையினர் மேற்கண்ட நிலை குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.