திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என ெதாடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. நேர ஒதுக்கீடு, ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகியவற்றில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருப்பதிக்கு தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

