நீதிபதியை 25 நிமிடம் தடுத்து வைத்த சம்பவம்; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

725

சிவாஜி கணேசன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வந்ததால் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றம் வரும் வழியில் அவரது வாகனம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் வழங்குங்கள் உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்தல்.

நீதிபதியை பணி செய்ய விடாமல் தடுத்து வைத்தது நீதிமன்ற அவமதிப்பு.

  • நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

உள்துறை செயலாளர் பிரபாகர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார்.

காலையில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாக உள்துறை செயலாளர் விளக்கம்.