Site icon News now Tamilnadu

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால் பரபரப்பு!

நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான யூடியூப் சேனல் நடத்தி வந்ததும் அவர் தக்கலை புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற நபர் என தெரிய வந்தது.இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் யார் ஆட்சியர் என்று கூட தெரியாத அளவிற்கு மக்கள் முட்டாளாக இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

Exit mobile version