Site icon News now Tamilnadu

நகைக்கடன் தள்ளுபடி- தணிக்கை செய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, தணிக்கைசெய்ய சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், நகைக்கடனை தள்ளுபடி செய்ய, அனுமதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தணிக்கை செய்ய மண்டல மற்றும் மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நகர கூட்டுறவு, மாவட்ட மத்திய கூட்டுறவு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு என தனித்தனியாக சிறப்பு தணிக்கை செய்யப்பட உள்ளது. இதனோடு, சோதனை தணிக்கை மேற்கொள்ளும் அலுவலர்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 13.50 லட்சம் பேர் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தணிக்கை செய்து அறிக்கை அனுப்பும் பணி வரும் மார்ச் 18- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, நகைகள் உரிமையாளர்களிடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version